பிரபல தனியார் தொலைக்காட்சியில் 2017ஆம் ஆண்டுமுதல் ஒளிபரப்பாகிவரும் தொடர் ’செம்பருத்தி’. இதில் கார்த்திக் ராஜ், ஷபானா, பிரியா ராமன் உள்ளிட்டோர் நடித்துவந்தனர். இதற்கிடையில், இந்த தொடரில் நடித்த துணை நடிகை ஒருவர் அளித்த புகார் காரணமாக கார்த்திக் ராஜ் தொடரிலிருந்து வெளியேறினார்.
'செம்பருத்தி' தொடரில் மீண்டும் இணைந்த நடிகர்! - செம்பருத்தி சீரியல்
சென்னை: செம்பருத்தி தொடரிலிருந்து விலகி நடிகர் அழகப்பன் என்பவர் தற்போது மீண்டும் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், விஜேவாக வேலைப்பார்த்து வந்த அக்னி என்பவர் கார்த்திக் ராஜ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரில் முக்கிய நபர்களில் ஒருவராக கருதப்படுபவர் அழகப்பன். இவரும் சில காரணத்தால் இந்த தொடரில் இருந்து வெளியேறினார். தற்போது ஹைதராபாத்தில் நடைப்பெற்று வரும் செம்பருத்தி தொடரில் அழகப்பன் மீண்டும் இணைந்துள்ளார். சரிந்து வரும் டிஆர்பி ரேட்டை தூக்கி நிறுத்தும் ஒரு நடவடிக்கையாக அழகப்பனை செம்பருத்தி குழுவினர் மீண்டும் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.
கிராமத்தில் இருந்து பணக்கார வீடு ஒன்றில் பணி பெண்ணாக சேர்ந்து பின் அந்த வீட்டிற்கே மருமகளாக ஆகும் ஒரு பெண், அவளை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே செம்பருத்தி தொடர். இந்த தொடருக்கு தமிழ்நாட்டில் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. தொலைக்காட்சி தொடர்களில் செம்பருத்தி முக்கியமானதாகவும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி வகிக்கும் தொடராகவும் இருந்து வருகிறது.