பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'மேன் Vs வைல்ட்' நிகழ்ச்சி உலகில் பலராலும் பார்த்து ரசிக்கப்பட்டுவருகிறது. காட்டிற்குச் சென்று எவ்வாறு தனியாக உயிர்பிழைப்பது என்பது குறித்து தனது சாகசங்களைப் பியர் கிரில்ஸ் செய்துகாட்டுவார்.
சமீபத்தில் பல பிரபலங்களைப் பியர் கிரில்ஸ் காட்டுப்பகுதிக்குக் கூட்டிச் சென்று எப்படிப் பிழைப்பது என்று காட்டும்விதமாக நிகழ்ச்சி அமைந்தது. இம்முறை நடிகர் ரஜினிகாந்த் கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் காட்டுக்கு பியர் கிரில்ஸுடன் சென்றிருந்தார்.