தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹைதராபாத் செல்கிறார் 'அண்ணாத்த' ரஜினி - Annatha shooting resumed

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டார்.

சென்னையிலிந்து ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த்
சென்னையிலிந்து ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த்

By

Published : Apr 8, 2021, 11:10 AM IST

சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. கரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.

அப்போது படக்குழுவினர் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினி தனது வீட்டில் ஒய்வெடுத்துவந்தார். இந்நிலையில், 'அண்ணாத்த' படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனப் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

சென்னையிலிந்து ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த்

இதனையடுத்து 'அண்ணாத்த' படப்பிடிப்பு மார்ச் 16ஆம் தேதி மீண்டும் தொடங்கி சென்னையில் நடைபெற்றுவந்தது. தற்போது இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டார். விஐபி கேட் நுழைவு வாயில் வாயிலாக விமான நிலையத்திற்குள் சென்ற அவர் ரசிகர்கள் மத்தியில் கையசைத்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details