தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முடிவுக்கு வரும் பிரபல சீரியல் - சோகத்தில் ரசிகர்கள் - நீதானே எந்தன் பொன்வசந்தம் தொடர்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் முடிவுக்கு வரும் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

neethane en ponvasantham
neethane en ponvasantham

By

Published : Dec 14, 2021, 12:30 PM IST

திரைப்படங்களைத் தாண்டி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி சீரியல்களில் நடித்துவரும் நாயகன், நாயகிகள் பெரிதும் பிரபலமாகின்றனர்.

அந்தவகையில் பிரபல தொலைக்காட்சியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம், 'நீதானே எந்தன் பொன்வசந்தம்'. இதில் தர்ஷனா, ஜெய் ஆகாஷ், அசோகன், சாய்ராம், சோனியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சுமார் 450 எபிசோடுகளை கடந்து இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

'நீதானே எந்தன் பொன்வசந்தம்' சீரியல் விரைவில் முடிவுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்த சீரியல் முடிவுக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சின்னத்திரை நடிகை அக்ஷயாவுக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details