தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'டிக்டாக்கை பயன்படுத்துவோர் ஒரு உதவாக்கரை' - சக்திமான் - டிக்டாக் செயலி

இந்தியாவில் டிக்டாக் செயலியைத் தடைசெய்ய கண்டனம் தெரிவித்து வருபவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக 'சக்திமான்' முகேஷ் கன்னா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Mukesh Khanna
Mukesh Khanna

By

Published : May 23, 2020, 3:48 PM IST

மக்களைத் தன்வசம் கவர்ந்துவைத்துள்ள செயலிகளில் ஒன்று டிக்டாக். ஆதரவையும், வெறுப்பையும் ஒருசேர சம்பாதித்துள்ள டிக்டாக் செயலி, அதுபோன்ற பல்வேறு வகை செயலிகளின் அரசனாக வலம்வருகிறது. இந்தியாவில் தடைசெய்யப்பட்டு, அதிலிருந்து மீண்டு புத்துயிர் பெற்றது.

இருப்பினும், கடந்த சில தினங்களாக #bantiktok, #tiktokdown, #bantiktokinindia போன்ற பல்வேறு ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகின. மேலும் டிக்டாக் தளம் பல சமூக விரோத கருத்துகளைப் பகிர்ந்து வருவதாகக் கூறி கூகுள் பிளே ஸ்டோரில் அதன் ரேட்டிங்கும் குறைந்தது.

இதைத்தொடர்ந்து 90's கிட்ஸ் சூப்பர் ஹீரோவான முகேஷ் கன்னா (சக்திமான்) டிக்டாக்கு எதிராக கன்டனம் தெரிவிப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "நண்பர்களே நம் வாழ்வில் டிக்டாக் வீடியோக்களை உருவாக்குவதை விட இன்னும் பல ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்ய உள்ளோம். இந்தக் கடினமான நேரத்தில் நமக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.

டிக்டாக் என்ற சீன வைரஸ் நம் வாழ்வில் இருந்தும், நம் சமூகத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்கிறது. 4.5 ஆக இருந்த ரேட்டிங்கை 1.3 ஆக நீங்கள் குறைத்திருப்பது டிக்டாக்கை உங்கள் வாழ்வில் இருந்து விரட்டுகிறீர்கள் என்பது தெரிகிறது.

தடை செய்யப்பட வேண்டிய சீன தயாரிப்பு பட்டியலில் டிக்டாக்கை முதலிடத்தில் நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்று நான் கூற விரும்புகிறேன். எதற்கும் உதவாதவர்களே டிக்டாக் செயலியைப் பயன்படுத்துகிறார்கள். இச்செயலி அவர்களை மேலும் எதற்கும் உதவாக்கரைகளாக உருவாக்குகிறது. இது தடை செய்யப்பட வேண்டும். டிக்டாக்கில் இளைஞர்களே டிக்டாக்கில் சிக்காமல் அதற்கு எதிரான இந்தப் பிரச்சாரத்தில் சேருங்கள். நானும் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.

சமீபத்தில், பைசல் சித்திக்கின் ஆசிட் தாக்குதல் தொடர்பான டிக்டாக் வீடியோ வெளியாக சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னரே டிக்டாக்கின் ரேட்டிங் சரிய ஆரம்பித்தது.

இதையும் படிங்க:ஜூலையில் வெளியாகும் 'இடம் பொருள் ஏவல்'? விளக்கமளிக்கும் தயாரிப்பாளர்

ABOUT THE AUTHOR

...view details