மைலி சைரஸ் - காடி சிம்சனின் 10 மாத டேட்டிங் முடிவுக்கு வந்தது - காடி சிம்சன்
வாஷிங்டன்: அமெரிக்க பாடகி மைலி சைரஸ், ஆஸ்திரேலிய பாடகர் காடி சிம்சன் பிரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'தி லாஸ்ட் சாங்' என்ற படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் அமெரிக்க பாடகி மைலி சைரஸ் - நடிகர் ஹெம்ஸ்வர்த் ஆகியோர் முதன்முறையாக சந்தித்தனர். இதையடுத்து 2012ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்த நிலையில், 2013ஆம் செப்டம்பர் மாதம் தங்களது உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு தங்களது உறவை மீண்டும் புதுப்பித்து, 2018 டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர். பிரிவதும், சேர்வதுமாக இருந்த இவர்களது உறவு குறித்து ஹாலிவுட்டில் சர்ச்சை எழுந்தது. இறுதியாக மைலி சைரஸ் - நடிகர் லியம் ஹெமஸ்வர்த் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பிரிந்தனர்.
இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்தித்த அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர் மைலி சைரஸ், ஆஸ்திரேலிய பாடகர் காடி சிம்சன் அதன்பின் இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர்.
மைலி சைரஸ் - காடி சிம்சன் ஆகியோர் கடந்த 10 மாதங்களாக டேட்டிங் செய்து வருகின்றனர். 10 மாத டேட்டிங்கிற்குப் பிறகு தற்போது இந்த ஜோடிகள் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இவர்கள் தரப்பிலிருந்து இதுவரை வெளியாகவில்லை.