தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விவாகரத்து முடிவில் கிம் கதார்ஷியன் - அமெரிக்கா செய்திகள்

தங்களது ஆறு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு தனது கணவர் கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்ய பிரபல நடிகை கிம் கர்தாஷியன் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்யே வெஸ்ட் கிம் கதார்ஷியன்
கன்யே வெஸ்ட் கிம் கதார்ஷியன்

By

Published : Sep 22, 2020, 8:49 AM IST

அமெரிக்காவின் பிரபல மாடல், தொலைக்காட்சி நடிகை, தொழிலதிபர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகை கிம் கர்தாஷியன். இவருக்கென உலகம் முழுவதும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல அமெரிக்க ராப்பரும், ஆடை வடிவமைப்பாளருமான கன்யே வெஸ்டை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், வெஸ்டுடனான ஆறு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவரை கிம் விவாகரத்து செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே கிம் - வெஸ்டின் திருமண பந்தத்தில் மனக்கசப்புகள் நிலவி வந்த நிலையில், வெஸ்டின் பை-போலார் டிசார்டர் மன நோய், கருக்கலைப்புக்கு எதிரான அவரது நிலைபாடு ஆகியவற்றால் இருவரது திருமண உறவிலும் தற்போது மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

43 வயதான பிரபல ராப்பரான வெஸ்ட், சமீப காலமாக தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் அதிகம் பகிர்ந்து வருகிறார். மேலும், தங்களது மூத்த மகள் நார்த் வெஸ்ட்டை கிட்டத்தட்ட தாங்கள் கருக்கலைப்பு செய்தது குறித்து சமீபத்தில் தான் பங்குபெற்ற பேரணி ஒன்றிலும், தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்திருந்தார்.

முன்னதாக, ’நான் தான் அமெரிக்காவின் அடுத்த அதிபர்’ என்று கன்யே பதிவிட்டதும், கிம் கர்தாஷியனை விவாகரத்து செய்யப்போவதாக பதிவிட்டு அதை அவர் சில நிமிடங்களில் நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :பாடகர் கன்யே ஏன் விவாகரத்து செய்வேன் என்று பதிவிட்டார்?- ரகசியத்தை வெளியிட்ட மனைவி!

ABOUT THE AUTHOR

...view details