தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Bigg Boss Elimination: இந்த வாரம் வெளியேறும் நபர் யார்? - பிக்பாஸ் நாமினேஷன்

பிக்பாஸ் ஐந்தாவது சீசனிலிருந்து இந்த வாரம் இசைவாணி (Isai Vani) வெளியேற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

By

Published : Nov 20, 2021, 12:49 PM IST

Updated : Nov 20, 2021, 1:08 PM IST

பிக்பாஸ் (Bigg Boss 5) ஐந்தாவது சீசன் தொடங்கி வெற்றிகரமாக 50 நாள்களை நெருங்கிவருகிறது. ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்டவர்களில் குறைவான வாக்குகள் பெறும் நபர்கள், ஞாயிற்றுக்கிழமை வெளியே அனுப்பப்படுகின்றனர்.

அந்தவகையில் இந்த வாரம் பாவனி, இமான், அபினய், தாமரை, இசைவாணி, சிபி, ஐக்கி, நிரூப், அக்ஷரா ஆகியோர் நாமினேட்டாகியுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து இசைவாணி (Isai vani) வெளியேறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இசைவாணி

கடந்த சில நாள்களாக அவர் பார்வையாளர்களை வெறுப்பு ஏற்றும் வகையில் செயல்கள் செய்வதால் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருப்பார் எனச் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

இதுவரை நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:BB DAY 47: சைலண்டாக நீருப்பை வெச்சி செய்த வருண்!

Last Updated : Nov 20, 2021, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details