’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒருவாரம் கடந்துவிட்டது. யார், யார் எப்படி என்பதை போட்டியாளர்களும் ரசிகர்களும் தற்போது ஓரளவிற்கு தெரிந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இன்றைக்கான முதல் நாமினேஷன் படலம் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்ட 8 பேரிலிருந்து இரண்டு பேரை ஹவுஸ் மேட்ஸ் நாமினேட் செய்வர். அதற்கான ப்ரோமோ வீடியோ இன்று (அக்.12) காலை வெளியாகியுள்ளது.
தொடங்கியது முதல் நாமினேஷன் படலம் : சிக்கிய இரண்டு பெண்கள்! - biggboss 4 promo
’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் படலத்தில் இரண்டு பெண்களுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
சிக்கிய இரண்டு பெண்கள்
அதில் நான்கு பேர் ஷிவானியையும், நான்கு பேர் சனம் ஷெட்டியையும் நாமினேட் செய்கின்றனர். சனம் ஷெட்டி நடிப்பது போன்றும், ஷிவானி அனைவரிடமும் பேசுவது இல்லை என்றும் மற்ற ஹவுஸ்மேட்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:நாஞ்சில் விஜயனை வீடு புகுந்து தாக்கிய சூர்யா தேவி!