தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 14, 2021, 11:11 AM IST

ETV Bharat / sitara

திரையில் தோன்றிய ஈஸ்வரன் - ஆர்ப்பரித்த சிம்பு ரசிகர்கள்!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தடைகளை தாண்டி திட்டமிட்டபடி சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் இன்று (ஜன.14) வெளியானது.

ஈஸ்வரனை கொண்டாடிய ரசிகர்கள்
ஈஸ்வரனை கொண்டாடிய ரசிகர்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நந்திதா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன.14) திரையரங்குகளில் வெளியானது.

ஓடிடி தளத்தில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, சிம்பு நடித்த அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்திற்கு ஏற்பட்ட இழப்பீட்டில் 2 கோடியை 40 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்காமல் ஈஸ்வரன் படத்தை வெளியிடக்கூடாது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டிருந்தார்.

ஈஸ்வரனை கொண்டாடிய ரசிகர்கள்
இதனால், ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகுமா என்ற சூழல் நிலவியது. இருதரப்பினர் இடையே நேற்று (ஜன.13) ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டபடி ஈஸ்வரன் திரைப்படம் இன்று (ஜன.14) வெளியானது. இதையடுத்து, சிம்பு ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details