ரசிகர்களால் நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட ’பிக்பாஸ்’ நான்காவது சீசன் இன்று(அக்.04) மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் இந்நிகழ்ச்சி இந்தமுறை கரோனா வைரஸ் காரணமாக தாமதமாகியுள்ளது. தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஒருபக்கம் இதில் யார்யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தாலும், மறுபக்கம் இம்முறை பிக்பாஸ் செட் எவ்வாறு இருக்கும் என்று தெரிந்துகொள்ள மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.