தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

BB DAY 46: கண்ணாடி டாஸ்க்கில் வார்த்தையைக் கொட்டிய போட்டியாளர்கள்! - பிக்பாஸ் 46 நாள்

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி 46 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

போட்டியாளர்கள்
போட்டியாளர்கள்

By

Published : Nov 18, 2021, 2:56 PM IST

பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் 46ஆவது நாள், ”ஏத்தி... ஏத்தி... ஏத்தி... என் நெஞ்சில் தீய ஏத்தி” பாடலுடன் உற்சாகமாகத் தொடங்கியது. இந்த வார வீட்டின் தலைவர் பிரியங்கா, ”அனைவரும் காலை எழுந்து நடனமாடினால் தான் சோறு” என்ற அளவுக்கு மிரட்டுகிறார்.

டாஸ்க் ஆரம்பித்து நீண்ட நேரமாகியும் பாவனியிடம் முட்டை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த இசைவாணியை, பிக்பாஸ் அவரின் பேட்ஜைக் கழட்டி இமானிடம் கொடுக்கச் சொன்னார்.

ராஜுவின் கண்ணாடியாக மாறிய பாவனி

கண்ணாடி டாஸ்க்கின் இரண்டாம் நாளான நேற்று (நவ.17) ராஜு கண்ணாடியின் பின்புறம் நிற்க, பாவனி அவரது கண்ணாடி போல் பேச ஆரம்பித்தார்.

அப்போது பேசிய பாவனி, “நீங்க மற்றவரிடம் அதிகமா பழகறீங்க... என்னிடம் பழகுவது இல்லை. இதனால் நான் நிறைய காயப்பட்டிருக்கிறேன். உங்களை எனக்குப் பிடிக்கும். சண்டை போடுவதால் பிடிக்காது என்று சொல்ல முடியாது" என்றார்.

ஒருவேளை பெல் அடிக்கும் வரை எதையாவது பேச வேண்டும் என்ற பிக் பாஸ் உத்தரவால், கட்டாயத்தால், பாவனி இப்படியெல்லாம் பேசினாரோ?

தாமரையைப் புகழ்ந்த பிரியங்கா

இரண்டாவதாக, கண்ணாடி டாஸ்க்கில் தாமரையைப் பார்த்து பிரியங்கா பேச வேண்டும். கண்ணாடி முன்பு அப்படியே தாமரை போவே வந்து நின்ற பிரியங்காவைப் பார்த்தால் நமக்கே சந்தேகம் வந்துவிடும் போல. இவர் தாமரையா, இல்லை பிரியங்காவா என்று!

பிரியங்கா பேசுகையில், "பாசத்துக்கு அடிமையானவள் நீ. இந்த விளையாட்டு உனக்குப் புரியலனு முதலில் நான் நினைச்சேன். ஆனால் உனக்கு அனைத்தும் புரியுது. நாம அழகா இல்லை என நீ நினைக்காத... உண்மையாகக் கோபப்படாமல் இரு" என பாசிட்டிவான விஷயங்களை மட்டும் சொல்லி முடித்துவிட்டார். தாமரை புரிந்துகொள்ளாமல் நடந்தும் கொள்ளும் சில விஷயங்களை அவர் சொல்லாதது பார்வையாளரான நமக்கே கோபத்தை ஏற்படுத்தியது.

இரண்டாம் சுற்று எப்படி இருந்தது?

ராஜு, பிரியங்காவிடம் பேசிய நீண்ட உரையாடல் முழுவதும் பார்வையாளர்களை நன்கு சிரிக்க வைத்தது. ஐக்கியைப் போல் இமான் நடந்துகொண்டது, அக்‌ஷரா மீது தண்ணீர் ஊற்றியது என நேற்றைய டாஸ்க் முழுவதும் கலகலப்பாகச் சென்றது.

ABOUT THE AUTHOR

...view details