பிக் பாஸ் நிகழ்ச்சி 2006ஆம் ஆண்டு இந்தியில்தான், நாட்டிலேயே முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியில் பிக் பாஸ் சீசன் 13 நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில், பெரும்பாலும் தங்களது டிஆர்பி ரேட்டிங்கிற்காக, இது போன்ற சர்ச்சையை உருவாக்குவது வழக்கம். இந்த சீசனில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் பரீட்சயமான பிரபலங்கள் பலரும், இதில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளானர்.
இந்நிலையில் பிக் பாஸ் 13 நிகழ்ச்சி ப்ரைம் டைமில் ஆபாச காட்சிகள் கொண்டு ஒளிபரப்பப்படுவதாகவும், இந்த நிகழ்ச்சிக்கு உடனடியாக தடை விதிக்க வலியுறுத்தியும் அவ்வப்போது பிரச்னைகளும் ஏற்படும்.
இதையடுத்து இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக சல்மான்கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று எனக்குள் தோன்றுகிறது. ஆனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்று என் மனம் சொல்கிறது.
நாடு எங்கே செல்கிறது. நம் மதிப்பீடுகளின் நிலை என்ன என்பதைப் பற்றி நான் நிறைய தெரிந்து கொள்கிறேன். பிரபலங்கள் மூலம் அறிந்து கொள்கின்றோம். பிக்பாஸ் இல்லத்தின் சூழலே போட்டியாளர்களின் நடவடிக்கைக்கு காரணம். ஜனவரி மாதம் முடியவேண்டிய நிகழ்ச்சியை தற்போது 5 வாரங்கள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை அவ்வளவு நாட்கள் தொகுத்து வழங்குவது கடினம் என்றார். சல்மான் கான் இல்லாத 5 வார நிகிழ்ச்சியை ஃபரா கான் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.