தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

BB DAY 23: எதிர்பார்க்காத தலைவர், டார்கெட் செய்யப்பட்ட பிரியங்கா - பிக்பாஸ்

பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் மூன்றாவது நாமினேஷன் பட்டியலில், ஒன்பது நபர்கள் சிக்கியுள்ளனர்.

பிரியங்கா
பிரியங்கா

By

Published : Oct 26, 2021, 1:08 PM IST

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி இதுவரை நாடியா, அபிஷேக் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியே சென்றுள்ளனர்.

பொதுவாக பிக்பாஸ் பழைய பாடல்களை நிகழ்ச்சியில் ஒலிக்க மாட்டார். ஆனால் நேற்றைய (அக்.25) எபிசோட்டில் 'துள்ளுவதோ இளமை' படத்திலிருந்து, 'நெருப்பு கூத்தடிக்குது' பாடலை ஒலிக்க வைத்தார். எப்போது வேக் அப் பாடலை, பிக்பாஸ் அன்றைய தினத்தன்று என்ன டாஸ்க் கொடுக்கப்படுகிறதோ அதை ஒப்பிட்டுத் தான் ஒலிப்பார். அப்படி இருக்கையில் எதற்காகப் பழைய பாடலை திடீரென ஒலிக்க வைத்தார் என ரசிகர்கள் குழம்பினர்.

பிறகு தான் அதற்குச் விடை கிடைத்தது. அது நெருப்பு வாரமாம். நெருப்பு நாணயம் வைத்திருக்கும் இசைவாணி, இந்த வாரம் கிச்சன் ஏரியாவை அவருடைய கன்ட்ரோலில் வைத்திருக்கலாம் என்றார் பிக்பாஸ். மேலும் என்ன சமைக்க வேண்டும், யார் சமைக்க வேண்டும் என அனைத்தையும் அவரே ஒரு வாரத்திற்கு ஆளுமை செய்யலாம் எனத் தெரிவித்தார்.

வாய்ப்பை நழுவ விட்ட இசை

பிக்பாஸ் அறிவித்தவுடன் இசை, "என்னை யாரும் கேட்காமல் கிச்சன் பொருள்களைத் தொடக்கூடாது. நான் சொல்லும் வரை எண்ணெய் அதிகமாக பயன்படுத்தக் கூடாது. இதனால எனக்குக் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை’’ என்றார். ஆளுமை தான் கையில் வழங்கப்பட்டவுடன், கெத்தாக ஆரம்பித்தார் இசை. ஆனால் அவரை யாரும் மதிக்காமல் அனைவருக்கு தங்களுக்குத் தேவையானதை கிச்சனுக்குள் நுழைந்து செய்தனர். அதை தட்டிக் கேட்டால் தவறாக நினைத்து கொள்வார்கள் என நினைத்து, தனக்கு கொடுக்கப்பட்ட பதிவியை இசை நழுவ விட்டுவிட்டார் என்றே சொல்லாம்.

யார் இந்த வார தலைவர்?

போட்டியாளர்களின் ஞாபகசக்தியைச் சோதித்துப் பார்க்கும் வகையில் அமைந்திருந்தது இந்த வாரத்திற்கான தலைவர் போட்டி. வீட்டிலுள்ள போட்டியாளர்களின் பெயர்களை வைத்து தான் இந்தப் போட்டி நடைபெற்றது. முதலில் ஒருவர் இன்னொரு நபரின் பெயரைச் சொல்ல வேண்டும்.

அந்த நபர் சொன்ன பெயரை திரும்ப சொன்னாலோ, ஒருவரின் பெயரை மாற்றிச் சொல்லினாலோ அவர்கள் வெளியேற வேண்டும் என்றார் பிக்பாஸ். இதில் இறுதியாகப் பிரியங்கா, மதுமிதா மட்டும் போட்டியிலிருந்தனர்.

பிரியங்கா தலைவராக இந்த வாரம் தேர்வு செய்யப்பட்டால், அவரை யாரும் எலிமினேட் செய்ய முடியாது. அதனாலேயே பலரும் மதுமிதா தலைவராக வேண்டும் என்று நினைத்தனர். இறுதியாக அனைவரும் விரும்பியது போல், மதுமீதா போட்டியில் வென்றார். தலைவராகப் பதிவு ஏற்றவுடன், வழக்கம் போல் வீட்டில் உள்ள அணிகள் பிரிக்கப்பட்டன.

அக்‌ஷராவின் மாஸ்டர் பிளான்

பாத்ரூம் ஏரியாவில் சின்ன பொண்ணுவை, அக்‌ஷரா தூண்டி விடுகிறார். 'இசைவாணி நாணயத்தை நீங்கள் வேண்டுமானால் எடுத்துவிடுங்கள். நான் நிரூப், பாவணி நாணயத்தைக் குறி வைத்திருக்கிறேன்" என்றார் அக்‌ஷரா. அதற்கு சின்ன பொண்ணு, " இந்த வயசுல நான் இதை எல்லாம் செஞ்சா நல்லாயிருக்குமா" என்றார்.

அம்மாடியோ.. அபிஷேக் செய்த மாஸ்டர் பிளானை விட அக்‌ஷரா அமைதியாக இருந்து, பல வேலைகள் செய்வார் போல.

நாமினேஷனில் சிக்கிய ஒன்பது பேர்

அக்‌ஷரா

வாரத்தின் முதல் நாளான நேற்று (அக்.25) நாமினேஷன் படலம் தொடங்கியது. இந்த வாரம் நெருப்பு வாரம் என்பதால், நாமினேஷன் நெருப்பு மூலம் நடைபெற்றது. தாங்கள் வெளியேற்ற விரும்பும் இரண்டு நபர்களின் பெயர்கள் வைத்த காகிதத்தைத் தீயில் காரணத்துடன் போட வேண்டும் என்றார் பிக்பாஸ்.

முன்பு எல்லாம் நாமினேஷனில் சரியான காரணத்தைச் சொல்லாமல் போட்டியாளர்கள் நாமினேட் செய்தால், பிக்பாஸ் கண்டிப்பார். ஆனால் இப்போது எல்லாம் உங்கள் வாயில் என்ன வருகிறதோ, அதை எல்லாம் செய்து கொள்ளுங்கள் என்று அமைதியாக இருக்கிறார்.

பிக்பாஸ் போட்டியாளர்கள்

இந்தவாரம் அக்‌ஷரா, சின்ன பொண்ணு, பிரியங்கா, சுருதி, பாவனி, அபினய், இமான், வருண், இசைவாணி ஆகியோர் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். இதில் நாணயங்கள் வைத்திருக்கும் நபர்களான இசைவாணி, பாவனி, வருண் சூப்பர் பவரை பயன்படுத்தி, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றனர்.

வருணைக் கலாய்த்த பிரியங்கா

பிரியங்கா கேங்கிலிருந்து அபிஷேக் சென்றுவிட்டதால், ஒரு நபர் அவர் அணியில் குறைந்துள்ளார். அந்த இடத்தில் வருணை எப்படியாவது சேர்க்க வேண்டும் என நினைத்தார் போல பிரியங்கா. 'தான் உண்டு, தன் வேலை உண்டு' என ஒரு பெரிய அண்டாவை வருண் கழுவிக் கொண்டிருந்தார்.

பிரியங்கா அதற்கு, 'எங்க நீ எப்படி இருக்க வேண்டியவன். இங்க வந்து இப்படி அண்டா கழுவிட்டிருக்கியே' எனக் கலாய்த்தார். பிரியங்கா பற்றித் தெரிந்ததால் என்னவோ வருண், 'கழுவுற மீனில் நழுவுற மீன்' போன்று அந்த இடத்திலிருந்து நழுவி சென்றுவிட்டார்.

இதையும் படிங்க:BB DAY 22: குறி வைக்கப்பட்டாரா அபிஷேக்? பிக்பாஸ் வீட்டை சுழட்டி எடுத்த கமல்

ABOUT THE AUTHOR

...view details