தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் வருகிறது பிக்பாஸ் - குஷியில் ரசிகர்கள் - bigg boss 3 tami

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’பிக் பாஸ் 3’ நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

மீண்டும் வருகிறது பிக்பாஸ்- குஷியில் ரசிகர்கள்
மீண்டும் வருகிறது பிக்பாஸ்- குஷியில் ரசிகர்கள்

By

Published : Mar 30, 2020, 3:18 PM IST

கரோனா வைரஸ் காரணமாக வரும் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக திரைப்படம், சின்னத் திரை தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்களின் படப்பிடிப்பு இல்லாததால் தொலைக்காட்சி நிறுவனங்கள் தவித்துவருகின்றன.

இதன் ஒருபகுதியாக பிரபல தொலைக்காட்சி, ஏற்கனவே தாங்கள் ஒளிபரப்பிய தொடரை மறு ஒளிபரப்பு செய்ய முடிவுசெய்துள்ளது. அத்தொடர் பிக்பாஸ் 3.

இந்த அறிவிப்பு அத்தொலைக்காட்சியின் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ள 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் தற்போதே தயாராகிவிட்டனர்.

இதேபோன்று தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம், மகாபாரதம் தொடர் ஒளிபரப்பாகிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா நெருக்கடிக்கு ஷில்பா ஷெட்டி ரூ. 21 லட்சம் நிதியுதவி

ABOUT THE AUTHOR

...view details