தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாட்ஷா ரஜினி பட வில்லன் உயிரிழப்பு! - தெலுங்கு நடிகர் நர்சிங் யாதவ் உயிரிழப்பு

திரையுலகில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதானை படைத்த பிரபல தெலுங்கு நடிகர் நர்சிங் யாதவ் இன்று (ஜன.02) உயிரிழந்தார்.

ரஜினி பட வில்லன் உயிரிழப்பு
ரஜினி பட வில்லன் உயிரிழப்பு

By

Published : Jan 2, 2021, 10:59 AM IST

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தவர் நடிகர் நர்சிங் யாதவ் (52).

இவர், தமிழில் ரஜினியுடன் இணைந்து பாட்ஷா, விஜய்யுடன் சேர்ந்து குருவி, விசாலுடன் பூஜை, விக்ரமுடன் ராஜபாட்டை என பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர், கடந்த சில நாள்களாக சிறுநீரக பிரச்னையால் அவதிபட்டுவந்த நிலையில் ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், இன்று (ஜன.02) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நர்சிங் யாதவ் இறப்பிற்கு அவரது ரசிகர்களும், திரையுல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: கட்சி தொடங்காத ரஜினி! உயிரை விட்ட ரசிகர்!

ABOUT THE AUTHOR

...view details