தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இசைப்புயலை பிரம்மிப்பில் ஆழ்த்திய குட்டி இசை சூறாவளி

பியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து உலக அரங்கையே அதிர வைத்த சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரத்தை நேரில் சந்தித்து ஏஆர் ரகுமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

By

Published : Mar 14, 2019, 8:07 PM IST

Lydian house

’தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்' என்ற பொழுத்து போக்கு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதனை புகழ்பெற்ற ஹாலிவுட் தொகுப்பாளரான ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவனும் கலந்து கொண்டார். இவர் 1900ம் ஆண்டு வெளிவந்த பிளைட் ஆப் தி பம்பிள்பி (Flight of the bumblebee) என்ற இசையை பியானோவில் வாசிக்கத் தொடங்கினார்.

முதலில் சாதாரணமாக வாசித்த சிறுவன் லிடியன், பின்னர் வேகமாக வாசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அனைவரும் எழுந்து நின்று பாராட்ட, இதை விட தன்னால் பல மடங்கு வேகத்தில் வாசிக்க முடியும் என்று மீண்டும் வாசிக்கத் தொடங்கினார்.

பியானோவில் லிடியன் வேகமாக வசிப்பதை பார்த்த நடுவர்கள் வியப்பில் அழ்ந்தனர். றிதும் பிழையில்லாமல், துணிச்சலாகவும் விவேகமாகவும் வாசித்த லிடியனின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வர, அதனைப் பார்த்த பிரபலங்களும் ஆச்சரியமடைந்து தங்களது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து பாராட்டினர்.

இந்நிலையில், இன்று மாலை லிடியன் நாதஸ்வரத்துக்கு நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் கலந்து கொண்டு சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இசையின் மந்திரத்தை வெளிபடுத்தியுள்ள லிடியன், சர்வதேச அளவில் இசை தூதராக லிடியன் வரவேண்டும் என்று பாராட்டினார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியில் இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து நிகழ்ச்சியில் வெற்றி பெற்று 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளது குறிப்பிடதக்கது.

ABOUT THE AUTHOR

...view details