தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பெங்களூரு நாகரத்னம்மா வாழ்க்கை வரலாற்று தொடரில் நடிப்பது ஸ்வீட்டியா... ஓ பேபியா!

இயக்குநர் சங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்க இருக்கும் வலைத்தொடர் ஒன்றில் நடிகை அனுஷ்கா அல்லது சமந்தாவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Anushka
Anushka

By

Published : Mar 30, 2020, 10:54 PM IST

தமிழில் 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'மகளிர் மட்டும்', 'ராஜ பார்வை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். இவர் தமிழில் மட்டும் பிளாக் பஸ்டர் படங்களை இயக்காமால் தெலுங்கில் இயக்கி வெற்றி இயக்குநராக மாறியவர்.

எழுத்தாளர் பத்ரி வெங்கடேஷ், பெங்களூரு நாகரத்னம்மாவின் வாழ்க்கை வாரலாற்றை மையமாக வைத்து எழுதிய புத்தகத்தை வைத்து சங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தற்போது வலைத்தொடர் ஒன்றை இயக்கவுள்ளார்.

இந்த வலைத்தொடர் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. இத்தொடரை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்க உள்ளது. இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுஷ்கா அல்லது சமந்தாவை நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details