தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

துப்புசிக்கு துப்புசிக்கு பிக்பாஸ் - இனி ஓடிடியில் பார்க்கலாம்! - சினிமா செய்திகள்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் ஷோ, ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Big Boss show
பிக்பாஸ்

By

Published : Jul 10, 2021, 12:44 PM IST

சென்னை: இந்தியாவில் பெரியளவில் ஹிட்டடித்த ஷோ பிக்பாஸ். இதற்கென ரசிகர்கள் பட்டாளம் எண்ணிலடங்காதவை எனக் கூறலாம்.

பல மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்த ஷோ ஹிந்தியில் 14 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. விரைவில் பிக்பாஸ் 15ஆவது சீசன் தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கான போட்டியாளர் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

அதேபோல் தமிழ் மொழியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது போட்டியாளர் தேர்வில் இருக்கும் ஹிந்தி பிக்பாஸ் 15ஆவது சீசனில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது இந்நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தொலைக்காட்சியில் தொடங்கும் முன்பே ஓடிடி தளத்தில் ஆறு வாரங்களுக்கு ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை வூட்(Voot) ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் தினமும் ஒருமணி நேரம் வெளியிடுவது மட்டுமின்றி, ரசிகர்கள் 24 மணி நேரமும் பார்க்கும்படி சில ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஓடிடி ஒளிபரப்பு முடிந்த பின்பு அதே போட்டியாளர்களைக் கொண்டு, நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்க, பிக்பாஸ் சீசன் 15 பிரம்மாண்ட தொடக்கத்துடன் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆர்யாவின் 'சார்பட்டா' ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details