தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ராமயாணம்' தொடர்ந்து மறுஒளிப்பரப்பு செய்யப்படும் 'மகாபாரதம்' - மகாபாரதம் தொடர்

தூர்தர்ஷனின் பிரபல மெகா தொடரான 'மகாபாரதம்' மீண்டும் ஒளிப்பரப்பு செய்யப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜடேகர் கூறியுள்ளார்.

Mahabharat
Mahabharat

By

Published : Mar 28, 2020, 7:32 AM IST

தூர்தர்ஷன் நேஷனல் தொலைக்காட்சியில் 1988ஆம் ஆண்டு பி.ஆர் சோப்ரா, ரவி சோப்ரா ஆகியோரின் இயக்கத்தில் ஒளிப்பரப்பட்ட தொடர் மகாபாரதம். இதில் நிதிஷ் பரத்வாஜ், முகேஷ் கண்ணா, கஜேந்திர செளகன், குல்பி பனித்தால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

1988ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி ஒளிப்பரப்பட்ட இந்தத் தொடர் 94 எபிசோடுகளுடன் 1990 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி நிறைவு பெற்றது.

தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வரும் கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தேசிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு முக்கிய பொழுது போக்கு அம்சமாக தொலைக்காட்சி உள்ளது.

இதனையடுத்து மகாபாரதம் தொடரை மறு ஒளிப்பரப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில், "டிடி நேஷனலில் நாளை (மார்ச் 28) முதல் எல்லா நாட்களும் நண்பகல் 12 மணி, இரவு 7 மணிக்கு மகாபாரதம் ஒளிப்பரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

கிட்டதட்ட 32 வருடங்களுக்கு பின் ராமாயணம் , மகாபாரத்தம் தொடர்களை தூர்தர்ஷனில் பார்க்கும் மகிழ்ச்சியில் மக்கள் உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details