தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இவருக்குப் பதில் இனி இவர்... பிரபல தொடரிலிருந்து வெளியேறிய 'புஷ்பா'! - அன்பே வா தொடர்

நடிகை ரேஷ்மா பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'அன்பே வா' தொடரிலிருந்து வெளியேறுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Reshma
Reshma

By

Published : Aug 6, 2021, 5:06 PM IST

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தில் 'புஷ்பா' கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர், நடிகை ரேஷ்மா பசுபலேட்டி.

ரேஷ்மா பசுபலேட்டி

இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து சில படங்களில் ரேஷ்மா நடித்து வந்தார். அதன்பின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்றதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனார். இதன் பின் விளம்பரங்கள், சின்னத்திரைத் தொடர்கள் என அனைத்திலும் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார்.

ரேஷ்மா பசுபலேட்டி

தற்போது இவர் பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகும் 'அன்பே வா' மெகா தொடரில் நடித்துவருகிறார். இந்த தொடரில் ரேஷ்மாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இப்போது இந்தத் தொடரிலிருந்து அவர் வெளியேறுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ரேஷ்மா பசுபலேட்டி

'அன்பே வா' தொடரில் ரேஷ்மாவின் கதாபாத்திரத்தில் நடிகை வினோதினி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ரேஷ்மா 'பாக்யலட்சுமி' தொடரில் 'ராதிகா' கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இதையும் பாருங்க: கொள்ளை கொள்ளும் பேரழகுடன் ரேஷ்மா பசுபலேட்டி

ABOUT THE AUTHOR

...view details