தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. திருமணத்துக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரங்கள் அமையும் படத்தில் மட்டுமே நடிந்த வந்த அவர், சமீபத்தில் புதிதாக 'நமீதா தியேட்டர்' எனும் ஓடிடி தளம் ஒன்றையும் தொடங்கினார்.
தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகும் நமீதா - புதுப்புது அர்த்தங்கள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரில் நடிகை நமீதா அறிமுகமாகியுள்ளார்.
தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகும் நமீதா
தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பவ் பவ் என்ற திரைப்படத்தை தயாரிக்கும் நமீதா, அதே படத்தில் நடித்தும் உள்ளார். இந்தச்சூழ்நிலையில், அவர் தற்போது புதிதாக தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி நடிகர்கள் தேவையானி, அபிஷேக் சங்கர், லியோனி உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'புதுப்புது அர்த்தங்கள்' தொடரில் நமீதாவும் இணைந்துள்ளார்.