சென்னை: நாய் குரைத்ததால் பக்கத்து வீட்டுக்காரர் வந்து தன்னை திட்டியது குறித்து சின்னத்திரை நாயகி ஜாக்குலின் மன வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொகுப்பாளராக இருந்து, தற்போது சின்னத்திரை தொடர்களிள் நாயகியாக நடித்து வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். தனது கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்துள்ள, இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளன. சென்னையில் வசித்து வரும் ஜாக்குலின் தனது பக்கத்து வீட்டுக்காரர், தன்னை மிகவும் மோசமாக திட்டியதாகவும், அதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “ஊரடங்கு நேரத்தில் பசியாக இருக்கும் தெரு நாய்களுக்கு எனது வீட்டின் கேட் அருகே உணவு வைத்தேன். அந்த உணவை சாப்பிட வந்த தெருநாய்களை நோக்கி, என் வீட்டில் இருந்த நாய்கள் குரைத்தன.