தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

செம்பருத்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரபலம்! - செம்பருத்தி தொடர்

சென்னை: செம்பருத்தி தொடரிலிருந்து நடிகர் கார்த்திக் ராஜ் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்திக் ராஜ்
கார்திக் ராஜ்

By

Published : Dec 14, 2020, 7:10 AM IST

பிரபல தனியார் தொலைக்காட்சியில் 2017ஆம் ஆண்டுமுதல் ஒளிபரப்பாகிவரும் தொடர் ’செம்பருத்தி’. இதில் கார்த்திக் ராஜ், ஷபானா, பிரியா ராமன் உள்ளிட்டோர் நடித்துவந்தனர். இதற்கிடையில் கடந்த சில நாள்களாக நடிகர் கார்த்திக் இத்தொடரிலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இருப்பினும் இதுதொடர்பாக செம்பருத்தி தொடர் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் ராஜ் இத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கையில், ”எங்கள் அன்பார்ந்த பார்வையாளர்களே! செம்பருத்தி தொடரை வெற்றியடைய வைத்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

இத்தொடரின் வெற்றிக்குப் பெரிய அளவில் பங்காற்றிய நடிகர் கார்த்திக் ராஜின் அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் வெகுவாகப் பாராட்டுகிறோம். கார்த்திக்குடன் இத்தனை ஆண்டுகள் பணியாற்றியதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இருப்பினும் எதிர்பாராத சில காரணங்களால், இத்தொடரில் அவருக்குப் பதிலாக வேறொருவர் நடிக்கவுள்ளார். அவர் மேலும், மேலும் வெற்றிபெற நாங்கள் அவரை வாழ்த்துகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கார்த்திக் ராஜ் ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ரங்கூனுக்கு ராசாத்தி இவள்- சனா மக்புல் புகைப்படத் தொகுப்பு

ABOUT THE AUTHOR

...view details