தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திருமண பந்தத்தில் இணையும் பிரபல சீரியல் ஜோடி! - தொலைக்காட்சி பிரபலங்கள் திருமணம்

தொலைக்காட்சி பிரபலங்கள் ரேஷ்மா முரளிதரன் - மதன் பாண்டியன் ஆகியோர் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளனர்.

reshma muralitharan
reshma muralitharan

By

Published : Nov 13, 2021, 7:24 PM IST

தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பான மெகாத் தொடர் 'பூவே பூச்சூடவா'. இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த ரேஷ்மா முரளிதரன் - மதன் பாண்டியன் ஆகியோருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

ரேஷ்மா முரளிதரன் - மதன் பாண்டியன்

இந்நிலையில், ரேஷ்மா முரளிதரன் - மதன் பாண்டியன் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. தற்போது இந்த ஜோடி நவம்பர் 15ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

இது குறித்து ரேஷ்மா முரளிதரன் தனது சமூக வலைதளத்தில், நாங்கள் திருமணப் பந்தத்தில் இணையவுள்ளோம் எனப் பதிவிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரபல நடிகைக்கு திருமணம்

ABOUT THE AUTHOR

...view details