தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கோலாகலமாக தொடங்கியது 61-வது கிராமி விழா!

லாஸ் ஏஞ்சல்ஸ்: இசை கலைஞர்களை கவுரவிக்கும் விருது விழாவான 61-வது கிராமி விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் சிறந்த பாடல் பதிவு, கம்போசிங், கலைஞர்கள் என பல்வேறு கேட்டகிரிகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

கிராமி விழா

By

Published : Feb 11, 2019, 1:22 PM IST

இந்த விருதுகளுக்கு கடந்த 2017 அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து 30 செப்டம்பர் 2018 வரை வெளிவந்த பாடல்களை விருது குழு கனக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. சிறந்த இசை, சிறந்த பாடல், சிறந்த ஆல்பம் என்று சுமார் 82 கேட்டகிரிகளில் விருதுகள் வழங்கப்பட்டுவருகிறது.

61-வது கிராமி சிறந்த பாடலுக்கான விருதை சைல்டிஸ் கேம்பினோவின் 'திஸ் இஸ் அமெரிக்கா' (Childish Gambino-This is america) வெற்றிப்பெற்றள்ளது.

இன்றை விழாவில் முதல் முறையாக கே-பாப் என்ற கொரிய பாப் இசை கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். சமீபகாலமாக இந்தியா உட்பட அநேக நாடுகளில் கே-பாப் இசை பிரபலமடைந்து வருகிறது குறிப்பிடதக்கது.

விருது விழாவை கேமிலா கேபேலோ ரிக்கி மார்டின் மற்றும் கியூப ட்ரம்பேட் இசைக் கலைஞரான ஆர்டுரோ சண்டலோவின் இசையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக பிரபல பாடகரும் பாடலாசிரியருமான அலிஸா கீ தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறார்

ABOUT THE AUTHOR

...view details