சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'மாஸ்டர்'. இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த நிலையில் கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
'மாஸ்டர்' 'குட்டி ஸ்டோரி'யின் பாடலுக்கு நடனமாடி வைரலான 'பிகில்' பட நடிகை! - குட்டி ஸ்டோரி பாடல்
'மாஸ்டர்' விஜய்யின் 'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு 'பிகில்' பட நடிகை வினயா ஆடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
'பிகில்' படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனைகளில் ஒருவராக நடித்த வினயா சேஷன், குட்டி ஸ்டோரி பாடலுக்கு அசத்தலாக நடனமாடியுள்ளார். லண்டனில் வசித்து வரும் வினயா அங்கு நடைபெற்ற நடன போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அப்போட்டியில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு தான் ஆடிய நடன வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோ உடன், உங்கள் அனைவருக்கும் இந்த வீடியோ பிடிக்கும் என்று நினைக்கிறேன். குட்டி ஸ்டோரி பாடலுக்காக நான் நடனம் ஆடினேன் அதிலிருந்து ஒரு சில காட்சிகள் இதோ உங்களுக்காக என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருவதால் தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.