தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காதல் குறித்து மனம் திறந்த ரகுல் பிரீத் சிங்! - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகை ரகுல் பிரீத் சிங் தனது பார்வையில் காதல் எப்படி உள்ளது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்

By

Published : Jul 9, 2020, 12:41 PM IST

'தடையறத் தாக்க' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகை ரகுல் பிரீத் சிங். அதைத்தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங், காதல் குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

அதில், "காதல் என்பதை முழுமையாக நம்புகிறேன். என் பெற்றோர்கள் தான் அதற்குக் காரணம். அது மிகவும் அழகாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இதை மக்கள் ஒருவித அழுத்தமாக எப்படி நினைக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. நீங்கள் ஒருவரை நேசிக்கும்போது, அவர்களை முழு மனதோடு நேசித்தால், அதுபோன்ற எண்ணம் தோன்றாது" என்றார்.

தொடர்ந்து பேசிய ரகுல் ப்ரீத் சிங், தான் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கூறியுள்ளார். அதில், "பையன் உயரமாக இருக்க வேண்டும். அவனைப் பார்க்கும் போது, நான் உலகத்தை மேல்நோக்கி பார்ப்பதுபோல் இருக்க வேண்டும். அவனுக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

மேலும், நான் 18 வயதிலேயே மாடலிங் செய்து பணம் சம்பாதித்தேன். அதற்குப் பிறகு கன்னட சினிமா எனக்கு வாய்ப்பு கொடுத்தது. அதை நான் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன். நான் ஆர்வமுள்ள ஒரு காரியத்தை மட்டுமே செய்யும் நபர். எனவே, முக்கியத்துவத்தின் வரிசையில் எனக்கு முதலில் திரைப்படங்கள், பின்னர் உடற்பயிற்சி மற்றும் உணவு. தொடர்ந்து நிறையப் படங்களில் நடிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details