மும்பை:சர்கார் பட நாயகி நடிகை தனிஷா முகர்ஜி (Tanishaa Mukerji) தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை கஜோலின் இளைய தங்கையான தனிஷா, நீல் என் நிக்கி, சர்கார், சர்கார் ராஜ்போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் வினய் நடிப்பில் வெளியான உன்னாலே உன்னாலே திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவரது அறிமுக படமான இஸ்ஸ்.. 2003இல் வெளியானது. தற்போது இவரது நடிப்பில் கோட் நேம் அப்துல் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் உளவுத் துறை அமைப்பான ரா-வை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.