தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தலைவரே... தலைவரே...'; எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலில் போனி செய்த சொமோட்டோ! - zomoto used the maanadu text

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மாநாடு திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா பேசும் புகழ் பெற்ற வசனத்தை பயன்படுத்தி சொமோட்டோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பாப் அப் (நோட்டிபிகேஷன்) அனுப்பி கவனத்தை ஈர்த்துள்ளது.

சொமோட்டோவின் எஸ்.ஜே.சூர்யா ஸ்டைல் பாப் அப் நோட்டிபிகேஷன்
சொமோட்டோவின் எஸ்.ஜே.சூர்யா ஸ்டைல் பாப் அப் நோட்டிபிகேஷன்

By

Published : Dec 3, 2021, 5:08 PM IST

ஒவ்வொரு நிறுவனமும் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு விதமான வியாபார உத்திகளை கையாளுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற 'மாநாடு' திரைப்படத்தின் ஒரு வசனத்தை சொமோட்டோ நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. மாநாடு திரைப்படத்தில் வில்லனாக நடித்து ஹார்ட்டின்களை அள்ளியவர் எஸ்.ஜே.சூர்யா.

இவர் இத்திரைப்படத்தில் தலைமை வில்லனாக நடித்த ஒய்.ஜி.மகேந்திரனிடம், "தலைவரே... தலைவரே... தலைவரே..." என செக்போனில் உரையாடுவது போல ஒரு வசனக்காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த வசனக்காட்சி இளசுகளிடம் பெரும் ஹிட் அடித்து, நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கத் தொடங்கினர்.

சொமோட்டோவின் எஸ்.ஜே.சூர்யா ஸ்டைல் பாப் அப் நோட்டிபிகேஷன்

தற்போது அதே பாணியில் "தலைவரே.. தலைவரே... இன்னைக்கு சமைக்காதீங்க. நாங்க இருக்கோம்” என தனது வாடிக்கையாளர்களுக்கு பாப் அப் (நோட்டிபிகேஷன்) மெசேஜ் அனுப்பியுள்ளது. சொமோட்டோ நிறுவனத்தின் இந்த வித்தியாசமான வியாபார யுக்தி பல்வேறு தரப்பிலும் பாராட்டை பெற்றுள்ளது.

இதே போன்று மற்றொரு தரப்பினரோ 'ப்ரண்ட்ஸ்' படத்தில் வடிவேலுவை திட்டும் ராதாரவி வசனக்காட்சியை போல, “ஆர்டர் போட உங்கொப்பனா காசு கொடுப்பான்?” என ஏழ்மை மக்களின் நிலையை சுட்டிக்காட்டுவதும் கவனம் பெற்றுள்ளது.

சமீபத்தில் இந்தி சர்ச்சையில் சிக்கிய சொமோட்டோ, “தமிழ்நாடே எங்களை ஒதுக்கி விடாதே” என்று அறிக்கை வெளியிட்டது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க:வெளியானது மணி ஹெய்ஸ்ட்டின் இறுதி பகுதி

ABOUT THE AUTHOR

...view details