தமிழ்நாடு

tamil nadu

’குருதி ஆட்டம்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு: யுவன் ட்வீட்

By

Published : Jul 1, 2021, 2:30 PM IST

Updated : Jul 1, 2021, 2:57 PM IST

அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ’குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், ’ரங்க ராட்டினம்’ பாடல் இன்று வெளியாகி உள்ளது. இதனை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

யுவன் ட்வீட்
குருதி ஆட்டம்யுவன் ட்வீட்

’எட்டு தோட்டாக்கள்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். தற்போது அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் குருதி ஆட்டம் எனும் படத்தை இயக்கி வருகிறார். ராக்போர்ட் இன்டர்நேஷனல் சார்பில், டி.முருகானந்தம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக ப்ரொமோஷன் வேலைகள் தடைபட்டிருந்தன. தற்போது இத்திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

யுவன் ட்வீட்

இந்நிலையில் இத்திரைப்படத்தின் ’ரங்க ராட்டினம்’ என்ற பாடல் இன்று (ஜூன்.30) வெளியானது. யுக பாரதியின் வரிகளில், அந்தோணி தாசன் பாடி வெளியான இந்தப் பாடலை யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடலை யுவன் ரசிகர்கள் சமூக வலைதலங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:வலிமை படம் குறித்து ’டபுள் அப்டேட்’ : ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்!

Last Updated : Jul 1, 2021, 2:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details