இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களில் நடித்தார்.
இதில், ‘இடம் பொருள் ஏவல்’ இன்னும் ரிலீசாகவில்லை. தற்போது நான்காவது முறையாக சீனுராமசாமியுடன் மாமனிதன் படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளார். இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி சங்கர் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா உள்ளிட்டப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இசைஞானி இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், முதன் முறையாக நானும் எனது தந்தையும் இணைந்து பணியாற்றுகிறோம். இப்படத்தின் பாடல்கள் இசைப் பிரியர்களை ஆச்சரியப்படுத்தும். இளையராஜா இசையமைக்கும் பாடல்களில் யுவன் சங்கர் ராஜா அவ்வப்போது பாடிவந்தார். அதே போல் யுவன் இசையமைக்கும் பாடல்களிலும் இளையராஜா பாடிவந்தார்.
தற்போது முதன் முறையாக இளையராஜவும் யுவன்சங்கர் ராஜாவும் மாமனிதன் படத்தில் இணைந்து இசையமைக்கின்றனர்.