'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரித்து வரும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிறுத்திவைக்கப்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 'வலிமை' படத்தில் 'தல' அஜித்துடன் நஸ்ரியா, ஹூமா குரேஷி, யோகி பாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வலிமை 'தல'க்கு ஓபனிங் பாடிய யுவன்? - அஜித்தின் வலிமை
சென்னை: அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஓபனிங் பாடல் பாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
yuvan
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், 'ஆலுமா டோலுமா', 'அடிச்சுத்தூக்கு' போன்ற பாடல்களை போல் இப்படத்திலும் ஒரு மாஸ் சாங் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அது அஜித்தின் அறிமுக பாடல் என்றும் அதனை யுவன் சங்கர் ராஜாவே பாடியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.