தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யோகி பாபுவின் அம்மாவாக நடிக்கும் கடலோரக் கவிதைகள் ரேகா! - யமலோகம்

யமலோகத்தில் வாழும் யோகிபாபுவிற்கு அம்மாவாக கடலோரக் கவிதைகள் ரேகா நடித்துள்ளார்.

ரேகா

By

Published : Apr 27, 2019, 7:15 PM IST

Updated : Apr 27, 2019, 9:27 PM IST

பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரேகா. இவர் 1990களில் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளின் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் இவர், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குநர் முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் 'தர்மபிரபு' படத்தில் அவருக்கு அம்மாவாக ரேகா நடித்து இருக்கிறார். யமன் மற்றும் யமலோக பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தில் ஜனனி அய்யர், ராதாரவி, ரமேஷ் திலக், போஸ் வெங்கட் , மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், கும்கி அஸ்வின், மாஸ்டர் கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். படத்தில் அதிகம் இடம் பெறவுள்ள யமலோகம் பிரம்மாண்ட செட் போடப்பட்டு இயக்கப்பட்டுள்ளது. ஏ.வி.எம். ஸ்டூடியோ, சென்னை, பொள்ளாச்சி ஆகிய சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Last Updated : Apr 27, 2019, 9:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details