சென்னை: காமெடியனாக பல படங்களில் கலக்கி வரும் யோகி பாபு, புதிய படம் ஒன்றில் 11 கேரக்டர்களில் தோன்ற இருப்பது தெரிய வந்துள்ளது.
இயக்குநர் அமீர் நடித்த யோகி படத்தில் காமெடியானாக தோன்றியவர் யோகி பாபு. இதன் பின்னர் பல படங்களில் நடித்த இவர், தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். தர்மபிரபு என்ற படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்தார்.
இந்த நிலையில், காவி ஆவி நடுவுல தேவி என்ற படத்தில் நடித்து வரும் யோகி பாபு, அந்தப் படத்தில் 11 கேரக்டர்களில் தோன்றவுள்ளராம். புதுமுக நடிகர்கள் ராம் சுந்தர், பிரியங்கா நடிக்கும் படத்தை புகழேந்தி இயக்குகிறார்.
இதில் கிருஷ்ணராக தோன்றும் யோகி பாபு, காதலர்களை சேர்த்து வைப்பதற்காக பல்வேறு அவதாரங்களை எடுக்கிறார் என்று இயக்குநர் புகழேந்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
முன்னதாக, நவராத்திரி என்ற படத்தில் சிவாஜி கணேசன் 9 கேரக்டர்களிலும், தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 கேரக்டர்களிலும் நடித்திருப்பார்கள். இதையடுத்து இவர்கள் இருவரையும் ஓவர்டேக் செய்யும் விதமாக யோகி பாபு நடிக்கிறார்.