இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைவாகப் பதிவாகிறது. இதற்கிடையில் மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இருப்பினும் தடுப்பூசி குறித்து தவறான வதந்திகள் பரவுவதால் மக்கள் அதனைத் தவிர்க்கின்றனர். இதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைத் துறையினர், அரசியல் கட்சியினர் பலரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படங்கள் வெளியிட்டுவருகின்றனர்.