தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யோகி பாபு - ஆஸ்திரேலிய பறவை இணையும் ‘காக்டெய்ல்’ - yogi babu

ஆஸ்திரேலிய பறவையுடன் யோகிபாபு இணையும் படத்திற்கு ‘காக்டெய்ல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

காக்டெய்ல்

By

Published : Apr 12, 2019, 8:38 PM IST

பீஜி மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தில் யோகி பாபு நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்.

இந்த வித்தியாசமான படத்தில் யோகி பாபு உடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'காக்டெயில்' என்கிற பறவையும் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.

இந்திய சினிமாவில் முதன் முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை. இந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

படத்தில் யோகி பாபுவும் அவரது நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்கிறார்கள். கொலையுண்டவர் யார்? அந்த கொலையை செய்தது யார்? இதிலிருந்து மீண்டு யோகிபாபு எப்படி வெளியே வருகிறார். இதில் பறவையின் பங்கு என்ன என்பதுதான் படத்தின் கதை.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாக 'காக்டெயில்' குழு தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details