கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையை மிகவும் பிரபலமடைந்தார்.
யாஷிகா ஆனந்த்துக்கு என்ன தான் ஆச்சு....! - கெளதம் கார்த்திக்
நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளத்தில் வெளியட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் 'ஜாம்பி' படத்தில் நடித்து வருகிறார். எப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது கவர்ச்சியான தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருவார்.
இதே போன்று தற்போது யாஷிகா தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கருப்பு பனியன் அணிந்து வெள்ளை குட்டை பாவடையுடன் தலையில் மல்லிகைப்பூ வைத்துள்ளார். இப்புகைப்படத்தில் யாஷிகாவின் இடது கால் முட்டியில் அடிப்பட்டுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் அவருக்கு என்ன ஆயிருக்கும் என்று தங்களது எண்ணங்களை பதிவிட்டு நக்கலடித்து வருகின்றனர்.