தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'என்னை மன்னித்துவிடு பவானி' - உயிரிழந்த தோழியை நினைத்து உருகும் யாஷிகா - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகை யாஷிகா ஆனந்த் தனது தோழி கார் விபத்தில் உயிரிழந்தது குறித்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யாஷிகா
யாஷிகா

By

Published : Aug 3, 2021, 6:47 AM IST

Updated : Aug 3, 2021, 9:16 AM IST

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த மாதம் 26ஆம் தேதி ஈசிஆர் சாலையில், தனது நண்பர்களுடன் காரில் வேகமாக சென்று, நிலை தடுமாறி சாலையின் தடுப்பின் மீது மோதினார்.

இவ்விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அவரது தோழி வள்ளி ஷெட்டி பவானி (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாஷிகா வெளியிட்ட பதிவு

இந்நிலையில் தனது நண்பரை இழந்த யாஷிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்ன நடக்கிறது என்பதை என்னால் வார்த்தையால் சொல்ல முடியவில்லை.

அந்த துயர விபத்திலிருந்து என்னைக் காப்பாற்றியதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டுமா, அல்லது என் சிறந்த நண்பரை என்னிடமிருந்து அழைத்துச் சென்றதற்காக, வாழ்நாள் முழுவதும் கடவுளைக் குற்றம் சொல்ல வேண்டுமா என எனக்குத் தெரியவில்லை. உன்னை நான் மிகவும் மிஸ் பண்றேன். நீ என்னை மன்னிக்க மாட்டாய் என எனக்குத் தெரியும்.

தயவு செய்து என்னை மன்னித்துவிடு பவானி. உன்னை ஒவ்வொரு நிமிடமும் நான் மிஸ் செய்கிறேன். நீ என்னிடம் திரும்பி வர பிரார்த்தனை செய்கிறேன். ஒருநாள் உன் குடும்பம் என்னை மன்னிப்பார்கள் என நம்புகிறேன். இந்த குற்ற உணர்வு என் வாழ்நாள் முழுவதும் இருக்கும்.

இந்த முறை என்னுடைய பிறந்தநாளை நான் கொண்டாடவில்லை. என் ரசிகர்களும் கொண்டாட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். என் தோழி குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Last Updated : Aug 3, 2021, 9:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details