தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யானை அப்டேட் - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியான அருண் விஜய் - latest cinema news

நடிகர் அருண் விஜய் நடிக்கும் 'யானை' படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அருண் விஜய்
அருண் விஜய்

By

Published : Oct 28, 2021, 4:57 PM IST

தமிழ் சினிமாவில் கிராமங்கள் முதல் நகரம் வரை அனைவரும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி. சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து, இவர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.

இவர் தற்போது தன் மனைவியின் அண்ணனான அருண் விஜய்யுடன் முதல்முறையாக இணைந்துள்ளார். 'யானை' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துவருகிறார்.

சமுத்திரக்கனி, ராதிகா, யோகிபாபு, கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவருகினற்னர்.

கிராமமும், நகரமும் கலந்த பின்னணியில் குடும்பங்கள் கொண்டாடும் ஆக்க்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

இந்நிலையில் யானை படத்தின் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று (அக்.28) தொடங்கியுள்ளது. இதற்காக அருண் விஜய் சென்னையிலிருந்து விமானம் மூலம் சென்றுள்ள புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:விஜய்யை வைத்து படம் இயக்கும் வெற்றிமாறன்?

ABOUT THE AUTHOR

...view details