தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அவதூறு புகார் குறித்து பிறகு முடிவு எடுப்பேன்' ராகவா லாரன்ஸ் - kanchana

காஞ்சனா இந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்தபின், தன்மீது அவதூறு பரப்புவார்கள் குறித்து முடிவு எடுப்பேன் என நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ்

By

Published : Apr 26, 2019, 3:01 PM IST

இது குறித்து நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "என் மீது அக்கறை உள்ள சில மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும், என்னைப் பற்றி அவதூறு பரப்பிவரும் சிலர் மீது காவல் துறை ஆணையரிடம் புகார் அளிப்பதாகத் நான் கேள்விப்பட்டேன். அப்படி எதுவும் செய்யவேண்டாம், பொறுமையைகக் கடைப்பிடிக்க வேண்டும்.

நான் மும்பையில் 'காஞ்சனா' இந்திப் படத்தின் படப்பிடிப்பில் உள்ளேன். அதனை முடித்துக்கொண்டு ஒரு நல்ல முடிவு எடுப்பேன்.

கடவுள் நமக்கான நல்லதைச் செய்வார். நமக்குக் கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனைப் பிரார்த்திப்போம். நம்மைப் பற்றிப் புரிந்துகொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்குக் கிடைக்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details