தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பழைய நகைச்சுவை படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ள வில் ஸ்மித் - வில் ஸ்மித் இன் புதிய படங்கள்

வாஷிங்டன்: நடிகர் வில் ஸ்மித் 'Planes,Trains & Automobiles' திரைப்படத்தின் ரீமேக்கில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

வில் ஸ்மித்
வில் ஸ்மித்

By

Published : Aug 19, 2020, 9:12 AM IST

ஹாலிவுட் இயக்குநர் ஜான் ஹியூஸ் இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் 'Planes,Trains & Automobiles'. இந்தப் படத்தில் ஸ்டீவ் மார்ட்டின், ஜான் கேண்டி, கெவின் பேக்கன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தது.

ஒரு சாலைப் பயணத்தில் சந்திக்கும் இரு நபர்கள் தங்களது வாழ்வில் நிகழ்ந்த விஷயங்களைப் பகிர்ந்து பயணிக்கும் நகைச்சுவை திரைப்படமாக இது உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் ஒரு சாராம்சத்தை எடுத்து தமிழில் கமல் நடிப்பில் வெளியான 'அன்பே சிவம்' உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிகர் வில் ஸ்மித், நகைச்சுவை நடிகர் கெவின் ஹார்ட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். ஆயிஷா கார் இப்படத்தை எழுதி இயக்க உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details