தெலுங்கு, தமிழ் போன்ற மொழி படங்களில் பிஸியாக நடித்து வருபவர் சமந்தா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதனையடுத்து சென்னையிலிருந்து, ஹைதராபாத்தில் செட்டிலாகிய அவர் சினிமாவில் பிஸியாக நடித்துவருகிறார். அதேபோல் திருமணத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் சமந்தா ரூத் பிரபு என்ற தனது பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொண்டார். அக்கினேனி என்பது நாகார்ஜூனாவின் பரம்பரையின் குடும்ப பெயர் ஆகும்.