நடிகர் டைகர் ஷெராஃபும், திஷா பதானியும் காதலிப்பதாகப் பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அந்த ஜோடி இது குறித்து வாய் திறக்கவில்லை.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் படுஆக்டிவாக செயல்படுபவர் நடிகர் டைகர் ஷெராஃப். இவர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஷைலேஷின், அலி சிக்கன் கடை குறித்த காணொலி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், கடையின் உரிமையாளர் ஷைலேஷ் கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு சிக்கன் பொரித்து எடுப்பதுபோல் இடம்பெற்றுள்ளது. 'யார்யா இவரு' எனக் குறிப்பிட்டு டைகர் ஷெராஃப் இந்தக் காணொலியில் பதிவிட்டுள்ளார்.
டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகிவரும் 'கணபத்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. கிறிஸ்துமஸ் வெளியீட்டாக இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிங்க:மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 'பீஸ்ட்' பட செட்