மான்ஸ்டர் யுனிவர்சிட்டி என்ற ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படத்தை இயக்கிய டான் ஸ்கேன்லன் இயக்கும் புதிய பேன்டஸி காமெடி திரைப்படம் ’ஆன்வேட்'.
சிறு தேவதைகள், விசித்திர மனிதர்கள், கடற்கன்னி, குதிரை மனிதன், ஒற்றைக் கண்களை உடைய அரக்கர்கள், யுனிகார்ன்கள், டிராகன்கள் உள்ளிட்ட அனைத்து மாய உயிரினங்களும் நிறைந்த ஒரு மந்திர உலகில் நடைபெறும் அசத்தலான கற்பனைக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு ஹாலிவுட் நடிகர்கள் டாம் ஹாலந்து, கிரிஸ் பிராட், ஜுலியா லூயிஸ், அக்டாவியா ஸ்பென்சர், அலி வாங் உள்ளிட்ட பலர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.