தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘கோபப்படாதீங்க... எல்லாம் உங்களுக்காகத்தான்’ - விஜய் ரசிகர்களுக்கு சமாதானம்! - பாடலாசிரியர் விவேக்

'பிகல்' படத்தின் டீசர் வெளியாக தாமதம் ஆனதால் கோபத்தில் உள்ள விஜய் ரசிகர்களை பாடலாசிரியர் விவேக் சமூகவலைத்தளம் மூலம் சமாதானம் செய்துள்ளார்.

bigil

By

Published : Oct 6, 2019, 4:57 PM IST

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக பணிபுரியும் படம் 'பிகில்'. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவரும் இத்திரைப்படத்தில் நயன்தாரா, இந்துஜா உள்ளிட்ட பல நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலரும் இந்த படக்குழுவில் இணைந்திருக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

தீபாவளி விருந்தாக இப்படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அக்டோபர் முதல் வாரம் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் டீசரோ, ட்ரெய்லர் குறித்த எந்த அறிவிப்பும் படக்குழுவினரிடம் இருந்து வரவில்லை. இதனால் கோபமடைந்த ரசிகர்கள் 'அப்டேட் விடு அர்ச்சு' என்ற ஹேஷ்டேக்கை சமீபத்தில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் படக்குழுவினர் திங்கள் அன்று டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும். ஆனால் இந்த வாரம் டீசர் வெளியாகுவது சிரமம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் கோபத்தில் இருந்த தளபதி ரசிகர்களை சமாதனம் செய்யும் வகையில் இப்படத்தின் பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். விஜய் ரசிகர்கள் அனைவரும் பாசிட்டிவ் கருத்துகளை மட்டும் தெரிவியுங்கள். உங்கள் கஷ்டம் புரியுது. ஆனால் தயாரிப்பு தரப்பையும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். அவர்களுக்கு பல சவால்கள் இருக்கும். ஒரு மாஸ் படத்தை தயாரித்து அதை வெளியிடுவது என்பது ஒரு மிகப்பெரிய சவால். இறுதியில் இது எல்லாம் உங்களுக்காகத்தானே. கோபித்து கொள்ளமால் படக்குழுவினரை வாழ்த்துங்கள்’ என்று விஜய் ரசிகர்களை சமாதானம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ஆன்லைனில் வெளியான 'பிகில்' டீசர்!

ABOUT THE AUTHOR

...view details