மதுரை மாவட்டம் பரவை பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புறப் பாடல்கள் பாடிவந்த இவர், தூள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதுவரை இவர் 25 படங்களில் நடித்துள்ளார்.
பரவை முனியம்மா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல்நல பாதிப்பால் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். பரவை முனியம்மாவின் மறைவு குறித்து நகைச்சுவை நடிகர் விவேக் உருக்கமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.