'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித்-சிவா கூட்டணியில் வெளியான நான்காவது படம் விஸ்வாசம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
மேலும் கோவை சரளா, யோகி பாபு, விவேக், ரோபோ சங்கர், தம்பி ராமையா, அனிகா, சுஜாதா சிவகுமார், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.208 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் 'விஸ்வாசம்' படத்தை, மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளன்று பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர்.
இப்படத்தின் மூலம் அந்த சேனலின் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்ததோடு 18.1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். இதனை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்திய அளவிலான டிஆர்பி தரவரிசையில் விஸ்வாசம் படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதேவேளையில் சர்கார், பாகுபலி, பிச்சைக்காரன் ஆகிய படங்களின் டிஆர்பி ரேட்டிங் சாதனைகளையும் விஸ்வாசம் முறியடித்துள்ளது.