சமூக வலைதளங்களில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு விஷயத்தை நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கிவருகின்றனர். சமீபத்தில்கூட "பாட்டில் கேப் சேலஞ்ச்" என்பதை ட்ரெண்டாக்கினர். பிரபலங்கள் முதல் பலரும் அந்த சேலஞ்சை செய்து ட்விட்டரில் வீடியோ பதிவிட்டனர்.
ஹேஷ்டேக் ட்ரெண்டில் 'விஸ்வாசம்' முதலிடம்! - trend
ட்விட்டர் இன்று 'ஹேஷ்டேக் தினத்தை' கொண்டாடி வருகிறது. இதையடுத்து ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்த பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
Hashtag
இந்நிலையில் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து ஜூன் 30ஆம் தேதிவரை முதல் ஐந்து இடத்தை பிடித்து ட்ரெண்டான ஹேஷ்டேக்கை ‘ட்விட்டர் இந்தியா’ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 'மக்களவைத் தேர்தல் 2019', 'கிரிக்கெட் உலகக் கோப்பை 2019', மகேஷ் பாபு நடித்த 'மகரிஷி', 'நியூ ப்ரோஃபைல் பிக்' ஆகிய ஐந்து ஹேஷ்டேக்கள் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டு ட்ரெண்டிங்கில் இருந்துள்ளன.