எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, லட்சுமி, சரிதா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘நெற்றிக்கண்’. 1981ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். கவிதாலயா தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் கதையை எழுதியவர் விசு. இவர் பல நகைச்சுவை திரைப்படங்களை இயக்கியவர். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர்.
’நெற்றிக்கண்’ ரீமேக் - தனுஷை எச்சரிக்கும் விசு
ரஜினியின் ‘நெற்றிக்கண்’ படத்தை தனுஷ் ரீமேக் செய்வதாக வெளியான தகவலையொட்டி விசு அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் ‘நெற்றிக்கண்’ படத்தை தனுஷ் ரீமேக் செய்வதாக தகவல் வெளியானது. இதையறிந்த விசு, கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்திடம் அனுமதி பெற்றிருந்தாலும், கதாசிரியர் என்ற முறையில் என்னிடம் இதுகுறித்து விவாதித்திருக்க வேண்டும். ‘தில்லு முல்லு’ படத்துக்கு திரைக்கதை எழுதியிருந்தேன். அது ரீமேக் செய்யப்பட்டபோதும் என்னிடம் அனுமதி பெறவில்லை. அந்த விஷயத்தில் நியாயம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘நெற்றிக்கண்’ படத்தை தனுஷ் ரீமேக் செய்வது உண்மை எனும் பட்சத்தில், விசு நீதிமன்றத்தை அணுக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.